1. முதலீடு செய்ய வேண்டியதின் அவசியம்

ஆரம்பிக்கும் முன் 

 

பங்குசந்தை முதலீடு எந்த அளவு லாபம் தருமோ, அதே அளவு பணம் இழக்கும் ஆபத்தையும் கொண்டது என்பதை நினைவில் கொள்க . அதனால் பங்குகளை வாங்கும்முன் விற்கும் முன் உங்களுடைய நிதி ஆலோசகரிடம் கலந்து கொள்ளவும்.

 

இங்கே சொல்லப்பட்ட தகவல்கள், எண்கள் எல்லாம் 2023 ஆகஸ்ட் மாதம் பதிவேற்றபட்டது. எதிர்காலத்தில் அவை சில சிறிய மாறுதல்களை கொண்டு இருக்கலாம். இருந்தாலும் முக்கிய மாற்றங்கள் அவ்வவ்போது மேம்படுத்தபட்டு கொண்டே இருக்கும். என்பதையும் நினைவில் கொள்க 

 

பங்குசந்தையில் பயன்படுத்தபடும் சொற்களை புரிந்துகொள்ள சில வார்த்தைகள் நேரடி ஆங்கிலத்திலும் , சில ஆங்கில வார்த்தைகள் தமிழ் எழுத்துருவிலும் பயன்படுத்தி உள்ளோம்.

பணத்தை  பணமாக சேமிப்பதை விட முதலீடு செய்வது தான் இன்றைய காலக் கட்டத்தில் ஒரு தனிமனிதருக்கு மிக மிக அவசியம். ஒருவர் சரியாக முதலீடு செய்ய கற்றுக்கொள்ளா விட்டால் காலப்போக்கில் இரண்டு பாதகங்கள் நடக்கும்.

  1.  நாம் முதலீடு செய்யாமல் சேமிக்கும் பணம், நாட்கள் போக போக அதன் மதிப்பை இழந்து கொண்டே வரும் (பணவீக்கம்)
  2.  பணத்தை வாரி வழங்கி நம்மை கோடிஸ்வரன் ஆக்கியிருக்ககூடிய நல்ல வாய்ப்பையும் தவற விட்டு இருப்போம்.

முதலில் நாம் சேமிக்கும் பணம் எப்படி அதன் மதிப்பை இழக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்

1. பணவீக்கம் (பணத்தின் வாங்கும் திறன் குறைதல்)

இன்று ஒரு பொருளை வாங்கும் அதே விலையில் இனிவரும் காலங்களில் வாங்க முடியாமல் போவதை பணவீக்கம்(INFLATION) என்று சொல்வார்கள். (பணவீக்கம் பற்றி தெளிவாக பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

2000 ம் ஆண்டு கால கட்டத்தில் 100 கிராம் சோப்பின் விலை 10 ரூபாயாக இருந்தது. இன்று 2024ல் அதே 100 கிராம் சோப்பு விலை   38 ரூபாயாக உள்ளது. இதை சாதாரணமாக பார்க்கும்போது விலை உயர்வு போன்று தெரியும். ஆனால் இது விலைஉயர்வு அல்ல. பணத்தின் மதிப்பு குறைந்துள்ளதால் அதிக பணம் கொடுத்து அந்த பொருளை வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

தெளிவாக பார்க்கலாம்

ஏதாவது ஒரு காரணத்தால் ஒரு பொருள் விலை மட்டும் தனியாக  ஏறினால் அதை விலைஉயர்வு என்று சொல்வார்கள். (உதாரணம் . அரசாங்கம் சிகரெட்டின் வரியை அதிக படுத்தியதால் , சிகரெட்டின் விலை மட்டும் தனியாக உயர்ந்தது. மற்ற பொருட்களின் விலை அல்ல)

ஆனால் அதுவே, ஒட்டுமொத்தமாக  எல்லா பொருளின் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒருசேர உயர்ந்து கொண்டே சென்றால் அதை பணவீக்கம் என்று சொல்வார்கள். சரியாக சொல்லவேண்டும் என்றால், பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது அதனால் அதிக பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது .

உதாரணம்

2000-வருடம் ஒருவரிடம் ஒருலட்சரூபாய் பணம் இருக்கிறது. அதை அவர் பெட்டியில் வைத்து பூட்டி விடுகிறார். இன்று அதை திறந்து பார்க்கும் போது இன்றும், அது ஒரு லட்ச ரூபாயாகத்தான் இருக்கும் . ஆனால் 24 வருட இடைவெளியை இப்போது கணக்கிடும் போது அதன் மதிப்பு முற்றிலும் மாறியிருக்கும். கீழே உள்ள அட்டவணை பாருங்கள்.

பொருட்கள் 2000 ல் விலை அன்று ஒரு லட்சத்தில் 2024 ல் விலை இன்று
சோப்பு
10
10000 சோப்பு வாங்கலாம்
40
2500 சோப்பு மட்டுமே வாங்கலாம்
பால் லிட்டர்
15
6666 லிட்டர் வாங்கலாம்
60
1666 லிட்டர் வாங்க முடியும்
பள்ளி கட்டணம்
10000
10 குழந்தைகள் சேர்க்கலாம்
40000
2 குழந்தைகள் மட்டும்
கடை சாப்பாடு
15
6666 சாப்பாடு வாங்கலாம்
80
1250 சாப்பாடு வாங்க முடியும்
வீட்டு வாடகை
2000
50 வீட்டுக்கு வாடகை
8000
12 வீட்டுக்கான வாடகை

ஒரு லட்சரூபாய் பணத்தை 2000-அம் வருடம் அவர் சேமிக்கும் போது, அந்த பணத்தால் என்ன செய்ய முடியுமோ. இன்று அதே பணத்தை கொண்டு நான்கில் ஒரு பங்குதான் செய்ய முடியும். இப்படி தான் ஆண்டுதோறும் பணம் அதன் வாங்கும் திறனை இழந்துகொண்டே இருக்கும். எதிர்வரும் வருடங்களில் இந்த மதிப்பு இன்னும் இறங்கும்.


இன்று 20000 சம்பளம் வாங்குகிற ஒருவரால் , 5 வருடம் கழித்து அதே 20000-தில் குடும்பம் நடத்த முடியாத நிலை ஏற்படும். வாடகை உட்பட அணைத்து செலவுகளும், பொருட்களின் விலையும் அதிகரித்து இருக்கும். ஆனால் சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்காது.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது ஒன்று தான்.

நாம்(திருமண சிலவு, எமெர்ஜென்சி fund, கல்லூரி கட்டணம் போன்ற
ஒருவருடத்திற்குள்  தேவைபடும் பணத்தை மட்டும்தான். பணமாகவே சேமிக்க வேண்டும்

கோடிகணக்கில் பணத்தை உருவாக்கவேண்டும் என்றாலோ , குழந்தைகளின் எதிர்காலத்திற்காக  போன்ற நீண்டகால இலக்கிற்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்றாலோ,  வெறுமனே பணமாக சேமிக்க கூடாது. முதலீடுகளாக தான் சேமிக்க வேண்டும்.

அப்படி முதலீடு செய்வது ஒருபக்கம் நம் பண மதிப்பை காக்கும். இன்னொருபக்கம் சரியான முதலீடாக இருந்தால், அதுவே நம்மை பெரும் செல்வந்தராக மாற்றும்.

நீங்கள் உண்மையிலே பெரும் பணக்காரர் ஆகவேண்டும் என்றால் முதலீடு செய்யும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பெரும் பணக்காரர்களில் பலர் முதலீடு செய்வதால் மட்டுமே பணக்காரர்களாக மாறியுள்ளாரகள்.

2. நம்மை கோடிஸ்வரன் ஆக்க கூடிய வாய்ப்பு

பணவீக்கம் , இனி நாம் அடையகூடிய லாபம் , வரவு எல்லாமே கூட்டுவட்டி முறையில்தான் கணக்கிடுவோம் . இது ரொம்ப எளிய கணக்குதான். ஆனால் வாழ்க்கையையே புரட்டி போடும் அளவுக்கு வலிமை கொண்டது. கூட்டுவட்டி பற்றி முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் . கூட்டு வட்டி பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே பார்க்கவும்

இதுவரை பணவீக்கத்தால் பணம் எப்படி அதன் வாங்கும் திறனை இழக்கிறது என்று பார்த்தோம்.

ஒவ்வொரு நாட்டிலும் பணவீக்கம் கண்டிப்பாக இருந்தே ஆகும் . அதன் சதவீதங்கள்தான்  நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியாவின் பணவீக்கம் கடந்த 20 வருடத்தில் தோராயமாக 5 – 7% கணக்கிட்டுள்ளார்கள். நாம் அதிகபட்சமாக 7 சதவீதத்தையே கணக்காக எடுத்துக் கொள்வோம்.

ஒருலட்சம் ரூபாய்க்கு  7% கூட்டுவட்டி   கணக்கிட்டால்   3,86,000 வரும். அப்படி என்றால் அன்று ஒரு லட்சம் வைத்து என்ன என்ன செய்ய முடிந்ததோ , இன்று அதையே செய்ய கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் தேவைபடும். 

ஒருவேளை அவர் ஒரு லட்சத்தை  முதலீடு செய்து இருந்தால் இன்று  அவருக்கு என்ன கிடைக்கும் என்று ஒரு சிறிய கணக்கு பார்க்கலாம். 

உதாரணம் வளர்ச்சி விகிதம் இன்றைய வளர்ச்சி என்ன நடந்திருக்கிறது
பெட்டியில் பூட்டிவைப்பது
0%
1,00,000
மதிப்பு 75% குறைந்து இருக்கும்
SAVINGS BANK டெபாசிட்
3%
1,86,000
உண்மையான மதிப்பில்லை
FIXED DEPOSIT LIKE
6.5%
3,69,000
பணவீக்கத்திற்கு நிகரான வளர்ச்சி
Gold
11.2%
8,35,000
நல்ல வளர்ச்சி
ஸ்டாக் மார்க்கெட் NIFTY 50
14.9
16,08,000
மிக நல்ல வளர்ச்சி

இந்த அட்டவணையில் பார்த்தபடி   இன்று நாம் செய்யும் முதலீடு   7%  விட அதிக  ரிட்டர்ன்ஸ்  தரும்போதுதான் சரியான முதலீடாக இருக்கும்

நாம் முதலீடு செய்த பணம் நமக்கு எவ்வளவு வருமானம் திரும்ப தந்துள்ளது என்பதை ROI – Return on investment, RETURNS, REWARD , ரிட்டர்ன்ஸ்  போன்ற வார்த்தைகளில் குறிப்பிடுவோம்.

பொதுவாக நாம் செய்யும் முதலீடு வகைகள் ​

1. நிலையான முதலீடுகள் (FD , RD, BONDS)

ROI: 

நிறுவனம் நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட சதவீதம் தான் ரிட்டர்னாக கிடைக்கும். சிலநேரத்தில் அவை INFLATION விட குறைவாகவும் இருக்கலாம். 

SAFETY : 

என்ன ரிட்டர்ன் எதிர் பார்க்கிறோமோ அது கண்டிப்பாக கிடைக்கும், குறைந்த ரிஸ்க். பணம் இழந்துவிடுவோம் என்று பயம் இருக்கிறது நான் ரிஸ்க் எடுக்க விரும்ப வில்லை என்பவர்கள் இது போன்ற முதலீடு களில் ஈடுபடலாம்.

LIQUIDITY: 

முதிர்ச்சி காலத்தில் தான் விற்க முடியும் . முன்பே பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு என்று கட்டணம் , அபராதம் (Penalty) விதிக்கப்பட்டு இருக்கும். நிபந்தனைகளை அறிந்து முதலீடு செய்ய வேண்டும்.

ஒரு பொருளை எப்படி எளிதாக எவ்வ்ளவு சீக்கிரத்தில் பணமாக மாற்றி கொள்ள முடியும் என்பதை LIQUIDITY  என்று சொல்வார்கள் . உதாரணமா  உங்களிடம் நகை இருக்கிறது என்றால் அடகு கடைக்கோ , ஜுவல்லரிக்கோ சென்று எளிமையாக உடனே பணமாக்கி கொள்ள முடியும்.  நிலம் வாங்கி விற்கிறீர்கள் என்றால், இந்த எளிமை அங்கு இருக்காது. நிலத்தை விற்று  பணமாக மாற்ற ஆட்களை தேடிபிடிக்க வேண்டும். விலையிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டி இருக்கும். 

2. விலையுயர்ந்த உலோகம் (தங்கம் வெள்ளி போன்றவை)

ROI:  

கடந்த 20 வருடத்தில் தங்கம் 12% ரிட்டர்ன்ட் தந்திருந்தாலும், நாம் நகைகளாக கடையில் வாங்கும் போதே செய்கூலி, சேதாரம், GST என்று  நம் முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட தொகை இழக்க வேண்டியிருக்கும். ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே தங்கமாக முதலீடு செய்வது போதுமானதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்

SAFETY :

நம்மிடம் இருப்பதால் நாம் தான் பாதுகாக்க வேண்டும் . பொறுப்பு நம்முடையது

LIQUIDITY: 

மிக எளிமையாகவே பணமாக மாற்றி கொள்ள முடியும்

3. ரியல் எஸ்டேட் (நிலம் , மனை , வீடு போன்றவை )

ROI: 

நிலம் நாம் வாங்கிய  இடத்தை பொறுத்து பங்குச்சந்தைக்கு நிகரான லாபம் வழங்கும். (ஆனால் ,நிலத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். சில இடங்கள் கிணற்றில் போட்ட கற்களை போல விலை அவ்வளவு சீக்கிரத்தில் ஏறாது. கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டேட்  விலைகள் மிதமிஞ்சி ஏறி உள்ளதால் இனி இதை போன்ற வளர்ச்சி மறுபடியும் தருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 2016 – 2020க்கு பிறகு ரியல் எஸ்டேட் பொறுத்தவரை  பெரிதான வளர்ச்சி இல்லை. நிலம் சார்ந்த முதலீடுகளுக்கு நல்ல அனுபவத்துடன் அணுக வேண்டும். அதை பர்சனல் பைனான்ஸ் பகுதியில் பார்க்கலாம்

SAFETY : 

சரியான இடம் தேர்ந்து எடுத்துவிட்டீர்கள் என்றால் மிக பாதுகாப்பானது. பெரிதான விலை சரிவுகள் இருக்காது.

LIQUIDITY:  

பெரிதாக லிக்விடிட்டி இருக்காது . உடனே பணமாக மாற்றுவது என்பது மற்ற முதலீடுகளை விட கடினம். நிலம் வாங்க அதிக தொகை தேவைப்படும்.

4. பங்கு சந்தை (பங்குகள் , பரஸ்பர நிதி , Etf போன்றவை )

ROI:

சரியான பங்குகளை தேர்ந்து எடுத்து முதலீடு செய்து இருந்தால் மற்ற முதலீடுகளை விட அதிக ரிட்டர்ன் தரும். இதுவரை வரலாற்றில் 14-15 % return தர கூடியதாக இருந்துள்ளது.மிக சிறிய தொகை கொண்டு கூட முதலீடு செய்ய முடியும்

SAFETY : 

பங்குசந்தையில் எப்போதும் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்பதால் ரிஸ்க் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் . அந்த ரிஸ்க்கை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.

LIQUIDITY:

நல்ல பங்குகள் என்றால் எளிமையான லிகுடிட்டி இருக்கும், இருந்தாலும்  நாம் தேர்வு செய்யும் பங்கு , பரஸ்பர நிதி பொறுத்து மாறுபாடுகளும் நிறைய உண்டு.  பங்குசந்தை பற்றி பார்க்கும்போது தெளிவாக பார்ப்போம்

இந்த அணைத்து முதலீடுகளிலும் குறிப்பிட்ட சதவீதமாக பிரித்து முதலீடு செய்யும் போதுதான் நம் பணம்  சரிவிகித முதலீடாக மாறும் . அதைபற்றி இனிவரும் ரிஸ்க் மேனேஜ் மென்ட் பகுதியில் விரிவாக பார்ப்போம் . முதலில் நாம் பங்குசந்தை  அறிந்து கொள்வோம்..

நீங்கள் எந்த அளவு ரிஸ்க் எடுக்கிறீர்களோ, அதே அளவு ரிட்டர்ன் கிடைக்கும்

Higher the risk the higher the return, the lower the risk lower the return.

தொடர்புடைய கேள்விகள்.
error: Content is protected !!